புதன், டிசம்பர் 16, 2009

வீரர்கள் Vs கயவர்கள்..!
தாய்மண் காக்க
குண்டு துளைத்த நெஞ்சோடு
குருதி ஓடும் மண்மீது
எல்லையில் எதிரிகளை
உதிரிகளாக்கும் வீரர்கள்..!தன்னுயிர் காக்க
பொட்டுவெடிக்கும் பயந்து
கட்டிலுக்கடியில் ஒளிந்து
நம் மண்ணை மட்டும் - இது

உனக்கு இது எனக்கென
கூறுபோடும் கயவர்கள்..
!


இவர்களும் இந்தியர்கள்..!


இந்த வரிகளை எழுத் கரு தந்த அன்பர் eskitha swamyஅவர்களுக்கு நன்றி..!

திங்கள், டிசம்பர் 14, 2009

அந்நிய வங்கியில்..!


இச்சை தீர்க்க ஒத்த காசு
கச்சைகட்ட ஒத்த காசு

துறுவலுக்கு ஒத்த காசு
இரவலுக்கு மிச்ச காசு

ஏழை வீட்டு அடுப்பு
எரியவில்லை - அவன்
வயிறு மட்டும் எரியயிலே

எதற்கடா நம்ம காசு
அந்நிய வங்கியிலே..!

உனக்குத்தான்
பட்டுகோட்டையான் சொன்னான்
"ஆடி ஓடி பொருளைத் தேடி......
அவனும் திங்காம பதுக்கி வைப்பான்....
அதிலே இதிலே பணத்தைச் சேத்து
வெளியிடப் பயந்து மறச்சுவைப்பான் ;
அண்ணன் தம்பி பொண்டாட்டி புள்ளை
ஆருக்கும் சொல்லாம பொதைச்சு வைப்பான் ;
ஆகக் கடைசியில் குழியைத் தோண்டி
அவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான்
"

அந்நிய வங்கியில் (swish bank) இந்திய பணம், பாருங்கள் இங்கே ..!

சனி, டிசம்பர் 12, 2009

பாரதி..!


பாரதி - உன் பாடல் தீ
பாரிருள் அறுக்கும் பரிதி - நீ..!
நீ நடந்த வீதி - என்றும்
எங்கள் பள்ளிக்கூடம்..!

நீ சொல்லியதொரு பாதி - யாம்
உரைப்போம் உலகுக்கு மீதி..!
சொல்லுதல் யார்க்கும்எளிது - உனைப்போல் 
சொன்னது செயல் அரிது..! 

பாமரனுகாய் பாட்டு படித்தாய்,
வீரனாய் வாழ்ந்து இருந்தாய், 
இறந்தும் முடியாது தொடர்ந்தாய்..!

பார் எங்கும் உன் பா தங்கும் 
வானும் மண்ணும் உன்னை பாட கெஞ்சும் 
யாழும் குழலும் உன் கவிதை பாடும்..!

(இவைகள் அவர் பாடல்கள் படிக்கும் போது தோன்றிய சிந்தனை துளிகள், தொடர் சந்தங்கள் இல்லை)

வியாழன், டிசம்பர் 03, 2009

யார் கரங்கள்..!


சகோதரி அருணா அவர்களின் கரங்களினால் தீட்டிய கரங்கள்

அதனமிகளிடம் தனம்
தானம் வினவும் கரங்களா..!

இறைவனிடம் அவனோரம்
ஓரிடம் வேண்டும் கரங்களா..

நாளெல்லாம் நசிந்து - கூலிவேண்டும்
தினக்கூலியின் கரங்களா..!

வலிநிறைந்த கரங்களா..!
வலுவிழந்த கரங்களா..!

கறைபடிந்த கரங்களா..!
கலைசொரியும் கரங்களா..!

சித்தனின் கரங்களா..!
பித்தனின் கரங்களா..!

எஞ்சிந்தை உரைப்பது யாதெனில்
நல்லனவெல்லாம் செய்தும்

உள்ளனவெல்லாம் கொடுத்ததும்
கொண்டனவெல்லாம் இழந்து

சாய்வதற்கு தோள் தேடும்
உண்டுரங்க இடம் தேடும்

அடுத்தநொடி வாழ வழிதேடும்
ஈழத்தமிழனின் கரங்களே..!

வெள்ளி, நவம்பர் 27, 2009

கேளிக்கை..!


இருக்கின்ற நாழியெல்லாம் இன்பமாய் களிப்பதும்
இரவுடன் பகலும் சுகமாய் துயில்வதும்

கணமெல்லாம் கேளிக்கையில் திளைப்பதும்
திரைகூத்தாடியை சிரஸ்தார் என்பதும்

மதி மயக்கும் மது அருந்துவதும்
மனம் பசப்பும் மாது பின்செல்வதும்

உரிமைகளையும் உடைமைகளையும் இழக்குந்தருணம்- நம்
உறவுகளையும் கடமைகளையும் மறக்குந்தருணம்

மதிகெட்டு மனிதன் செய்யும் தருணம் - ஆங்குநல்
மதியுள்ளோர் அதை மாற்றிட வரணும்..!

திங்கள், நவம்பர் 23, 2009

இவன் மானிடன்..!

மானிடனாய்ப் பிறந்துவிட்டோம் - நாம்
மதிகெட்டு இருந்துவிட்டோம்

ஏட்டிலுள்ளதை படித்துவிட்டோம் - அதையேன்
படித்தோம் மறந்துவிட்டோம்

மதசாதியால் பிரிந்துவிட்டோம் - மனம்,
அதை சகதியால் நிரப்பிவிட்டோம்

பணத்தை மனதிலே எத்திவிட்டோம் - குணம்,
அதை குப்பையிலே கொட்டிவிட்டோம்

கொள்ளாத குற்றங்களை செய்திடுவோம் - பலம்
இல்லாத எளியவன்மேல் பழிசொல்லிடுவோம்

தள்ளாத வயது சென்றிடுவோம் - அன்றும்
இல்லாத பெருமை பேசிடுவோம்

மானங்கெட்ட ஈனப்பிறவியடா மானுடன் - இவன்
மாண்டு அழிந்தாலும் மனம் குணம் மாறிடன்

வெள்ளி, நவம்பர் 20, 2009

அழகு..!


பார் அழகு
பார்க்கும் விழியழகு

இருளழகு - அதிலே
ஒரு துளி ஒளியழகு

மலையழகு - ஆங்கே
பொழியும் மழையழகு

சிலையழகு - சிற்பியின்
சீர்மிகு கலையழகு

ஆணழகு - அவன்
கொண்ட ஆண்மை அழகு

பெண்மையழகு - அவள்
ஈனும் தாய்மையழகு

மொழியழகு - செந்தமிழாயின்
நம் சிந்தையழகு

உண்மையழகு - பொதுநல
பொய்யும் அழகு

பிறப்பழகு - பிறர்கெனின்
இறப்பும் அழகு

திருமணமழகு - இருமனம்
ஒன்றானால் இல்லறமழகு

துன்பம் நீக்கும் துறவறமழகு
மானம் காக்கும் மறமழகு

மகுடம் கொண்ட சிரமழகு
வாரி வழங்கும் கரமழகு

மனமழகு - எனின்,
யாவும் பேரழகு..!

செவ்வாய், நவம்பர் 03, 2009

துருவங்கள்..!


இரவும் பகலும்
நீரும் நெருப்பும்

வடக்கும் தெற்கும்
வானும் மண்ணும்

நன்மையும் தீமையும்
நாமமும் பட்டையும்

மதமும் மனிதமும்
சாதியும் சமத்துவமும்

எதிர் துருவங்களே - எப்போதும்
இவைகள் இணைவதில்லை