சனி, டிசம்பர் 12, 2009

பாரதி..!


பாரதி - உன் பாடல் தீ
பாரிருள் அறுக்கும் பரிதி - நீ..!
நீ நடந்த வீதி - என்றும்
எங்கள் பள்ளிக்கூடம்..!

நீ சொல்லியதொரு பாதி - யாம்
உரைப்போம் உலகுக்கு மீதி..!
சொல்லுதல் யார்க்கும்எளிது - உனைப்போல் 
சொன்னது செயல் அரிது..! 

பாமரனுகாய் பாட்டு படித்தாய்,
வீரனாய் வாழ்ந்து இருந்தாய், 
இறந்தும் முடியாது தொடர்ந்தாய்..!

பார் எங்கும் உன் பா தங்கும் 
வானும் மண்ணும் உன்னை பாட கெஞ்சும் 
யாழும் குழலும் உன் கவிதை பாடும்..!

(இவைகள் அவர் பாடல்கள் படிக்கும் போது தோன்றிய சிந்தனை துளிகள், தொடர் சந்தங்கள் இல்லை)

வெள்ளி, டிசம்பர் 04, 2009

அற்பு..!


அற்பு
அருகினில் இருக்கயிலே
அலைகடலும் கோணியிலே
அடித் தொலைவு போகயிலே
பிடி நாடியும் ஓடவில்லே..!

உன்மத்தன்..!

அவள்,
கரு விழியாள்
பெரு விழியால்

ஒரு வழி இல் - நம்
உயிர் வலியில்

இவன்,
பெண் விழியால்
பெரும் பழியால்

விதி வசத்தால்
மது ரசத்தால்

மதி இழப்பால்
மனக் கசப்பால்
பவுசு கெடுப்பார்..!

வியாழன், டிசம்பர் 03, 2009

யார் கரங்கள்..!


சகோதரி அருணா அவர்களின் கரங்களினால் தீட்டிய கரங்கள்

அதனமிகளிடம் தனம்
தானம் வினவும் கரங்களா..!

இறைவனிடம் அவனோரம்
ஓரிடம் வேண்டும் கரங்களா..

நாளெல்லாம் நசிந்து - கூலிவேண்டும்
தினக்கூலியின் கரங்களா..!

வலிநிறைந்த கரங்களா..!
வலுவிழந்த கரங்களா..!

கறைபடிந்த கரங்களா..!
கலைசொரியும் கரங்களா..!

சித்தனின் கரங்களா..!
பித்தனின் கரங்களா..!

எஞ்சிந்தை உரைப்பது யாதெனில்
நல்லனவெல்லாம் செய்தும்

உள்ளனவெல்லாம் கொடுத்ததும்
கொண்டனவெல்லாம் இழந்து

சாய்வதற்கு தோள் தேடும்
உண்டுரங்க இடம் தேடும்

அடுத்தநொடி வாழ வழிதேடும்
ஈழத்தமிழனின் கரங்களே..!