சனி, ஆகஸ்ட் 10, 2013

தமிழே



இயலும் இசையும் 
கொண்ட தமிழே 
இனியும் தொடரும் 
உன் நாடகமே 

வருவாய் தருவாய் 
அமுதம் காதினிலே 
படுவாய் படர்வாய் 
மொழியும் நாவினிலே 

இயல்பாய்பேச இனிப்பாய் 
என்றும் செந்தமிழே 
கனியாய் கனிவாய் 
கற்பவர் வாயினிலே 

எழுவாய் பயனிலை 
கொண்ட இலக்கணமே 
எழுவாய் தொடுவாய் 
என்நாவில் இக்கணமே.. 


கலவி


அர்த்தமில்லா  இரவுகளை 
அர்த்தம் சேர்த்து 
புத்துயிர் படைக்க 
என்னுயிரே என்னருகேவா !!

ஒரு போர்வைக்குள் 
ஆதிவாசியாய் புரளுவோம் !
ஊற்று அருவி 
ஏதுமின்றி  நனைவோம் !

மார்பின் முடிகளில் விரல்
 நுழைத்து விளையாடவா !
மறைவிடத்தில் அம்பு
 துளைக்க அனுமதி தா !

எத்தனை இரவுகள் 
ஏங்கிக் கிடப்பேன் !
ஏக்கம்நீக்கி தாகம்போக்க 
என்னுயிரே என்னருகேவா !