புதன், ஜனவரி 16, 2013

இறைவா..!


உங்கருணையில துளியளவு 
தூவிவிட்டா புவிசெழிச்சு 
பூந்தோட்ட மாகுமப்பா 

மலையளவு எம்மடியிலநீ 
போட்டுபுட்ட மனமெல்லாம் 
உங்கீர்த்தி பாடுதப்பா 

நல்லதுநாலு செஞ்சு 
தரணியில வொருகூட்டம் 
உன்வழியில வாழுதப்பா 

எம்போல் பாவியொருத்தன் 
படியேற உம்வேதம் 
ஒர்வழிய காட்டுதப்பா 

என்னிதயத்துல குடியிருக்கு 
மன்பர்பலர் பார்வையில 
இவ்வுலகமழகாய் தெரியுதப்பா 

எனக்கிட்ட பிச்சபோல 
வொருபுடிய உங்கருணையால 
அவர்மடியில போடுமப்பா 

இத்தனநாள் நாஞ்செய்யு 
தீமையெல்லாம் என்னத்தீண்டாம 
தீக்கிறை யாக்குமப்பா 

வருநாளெல்லாம் உம்புகழ் 
பாடியுனக்கோர் நல்லடிமை 
இவனென் றாக்குமப்பா...

செவ்வாய், ஜனவரி 15, 2013

என்னை யாரென்று...எதிமறை வார்த்தைக்கெல்லாம்
வரையறா விடுமுறைதந்து
உள்ளஞ்சிலிர்க்கும் உணர்வூட்டும்
தமிழ்த்தேடும் அனுபவம்

வெற்றிதரா தருணங்கள்
சோகம்விதைக்கா ஆச்சரியம்
இலக்கிடம் இடைவெளியின்றி
நகரும் நோகாபாதம்

உழைப்பின் ருசியறிந்த
உச்சக்கட்ட நிமிடங்கள்
வேர்வையின்றி விளைந்த
வெற்றியும் கசந்தமாயம்

என்னை யாரென்று உணர்ந்தபின்
எத்தனை எத்தனை மாற்றம்
"நாளை" விழிகளில் பதிகிறது 
இமயம் தொட்ட நிமிடங்களாய்...