வெள்ளி, ஜூலை 23, 2010

தாய்மண்ணே!


எத்தனையோ
காலந் தொட்டு

எத்தனையோ
வாழ்க்கைக் கெட்டு

எத்தனையோ
உறவை விட்டு

எத்தனையோ
உயிரைச் சுட்டு

இன்னும் எத்தனையோ
எத்தனையால் கிட்டிய

நம் சுதந்திரத்தை
நம் அத்தனின்

பெயரால் மொத்தமாய்க்
காத்துச் சுத்தனாவோம்...!

புதன், ஏப்ரல் 14, 2010

அன்பே..!


கல்லானும் உனைக் கண்டால்
காதல் கவிப்பல பாடுவான்

கார்ல்மார்க்ஸ் உனை யடைய 
தனி யுடமைப் பேசுவான் 

மகாக்கவி எழுதிய தூரியக்கோல் 
போல் கூரியக்கண்கள் உனது

உன்மலர் முகங்கண்டால் மகா
கவியெழுதும் கைகள் எனது

கண்ணதாசனை உந்தன் தாசனாக்கும் 
கார்மேகக் கூந்தல் உனது 

காணு மியற்க்கை அழகையெல்லாம் 
ரசிப்பதிலே உனக்கு பாவேந்தன்மனது 

அருங் கருத்துப்பல பேசுகின்றாய் 
பட்டுககோட்டையான் போலே 

உன்னை முழுமையாய்க் கவிப்பாட 
வேண்டுமொருவன் கம்பனுக்கு மேலே 


(குறிப்பு - காதல்கவிதை எழுத முதல்முறை முயற்சி செய்துள்ளேன்,)

சனி, ஏப்ரல் 03, 2010

ஆரம்பகால கிறுக்கல்கள்..!



மெய்த்தேடல்

எழுத்தறிவித்தவன்
இறைவன்,
என்னை
அறிவிப்பவன் யார்?
தேடுகின்றேன்...
பொன்னல்ல..
பொருளல்ல..
என்னை நானே..
எனக்குள்ளே..
யாரென்று?
தேடுகின்றேன்..
இன்னும் விடையில்லை..!


(இது அநேகமாக நான் முதன் முதலில் எழுதிய கவிதையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.)










வறட்சி

மழைநீர்த்தேடும்
மண்ணுக்கு
கண் நீர்த்
துளியை
பரிசளிக்கும்
விவசாயி





        



 சாலையோர மனிதன்

நடைபாதைலே
எனதுறக்கம்,
நண்பனாய்
பசிமட்டும்
இருக்கும்,
மனிதகுல
பூதான் நானும்,
இருந்தும்
கல்லறைப்பூகளாய்..!

செவ்வாய், பிப்ரவரி 02, 2010

கடவுள் இருக்கின்றார்..!


கண்டதெல்லாம் கடவுள் இல்லை - நாம்
கண்டதிளெல்லாம் கடவுள் இல்லை

காண முடிந்தது கடவுள் இல்லை - நம்
கருத்துக்கு இசைந்தது கடவுள் இல்லை

பிணம் ஆனவன் கடவுள் இல்லை -பெரும்
பணம் கொண்டவன் கடவுள் இல்லை

மதம் கொண்டவன் கடவுள் இல்லை - பெரு
சினம் கொண்டவனும் கடவுள் இல்லை

அகமிருப்பது கடவுள் இல்லை - வெறும்
சுகம் தருவது கடவுள் இல்லை

உருகொண்டது கடவுள் இல்லை - யாரும்
உருகொடுப்பது கடவுள் இல்லை

கோடி கடவுள் இல்லை - அறிந்தவர் சொல்
 அல்லாஹன்றி கடவுளேதும் இல்லை 

சனி, ஜனவரி 30, 2010

அக்காவுக்கு அர்ப்பணம்..!


என்வாசல் தோரணமே
இறைவன் கொடுத்த சீதனமே
பேசும் கனிமொழியே
பாடும் கவிக்குயிலே
பழக செந்தமிழே
தோழியான தமக்கையே
தூரம்போன தோழியே

தம்பியானவன்
தமியனாகும் நேரமிது,
தலைபாரம் இறக்கி
நெஞ்சில் சுமக்கும்
காலமிது - உன் திருமணம்

வார்த்தை ஒப்பனையில்லை
வெறும் கற்பனையில்லை
இடையேவந்த பந்தமில்லை
புறம்பேசும் சொந்தமில்லை- என்
அன்புக்கு வானமும் எல்லையில்லை