ஞாயிறு, டிசம்பர் 14, 2014

பெரியார் என்னதான் செய்துவிட்டார்?பெரியார் என்னதான் செய்துவிட்டார்?

விவசாயி விதைத்த விதை
பொறியாளராய் விளைந்தபின் வினவுகிறான்!

என் மதத்தை இழித்ததைத்தவிர
பெரியார் என்னதான் செய்துவிட்டார்?

சாஸ்திரங்களை பலித்ததை தவிர
பெரியார் என்னதான் செய்துவிட்டார்?

வேத இதிகாசங்களை நகைத்ததைவிட
பெரியார் என்னதான் செய்துவிட்டார்?

புராணம் புளுகு என்றதைத்தவிர
பெரியார் என்னதான் செய்துவிட்டார்?

ஆம்! பெரியார் என்னதான் செய்துவிட்டார்?

இன்று கேள்வி கேட்பவரை - அன்று
கோயிலுக்குள் நுழைய செய்தார்

புத்தகம் ஏந்த செய்தார்
புதுஉலகம் காண செய்தார்

புத்திகெட்ட சூத்திர மாந்தராய்
ஒத்திருந்து மடியாதே என்றார்

வருத்தம் இதுவே! ஆரியமாயையில்
அடிமையாய் கிடந்தவன் இன்றுமீண்டும்.

அட, பெரியார் என்னதான் செய்துவிட்டார்?
 உனக்கும் கேள்விகேட்கும் உரிமைதந்தார்!