பாரதி - உன் பாடல் தீ
பாரிருள் அறுக்கும் பரிதி - நீ..!
நீ நடந்த வீதி - என்றும்
எங்கள் பள்ளிக்கூடம்..!
நீ சொல்லியதொரு பாதி - யாம்
உரைப்போம் உலகுக்கு மீதி..!
சொல்லுதல் யார்க்கும்எளிது - உனைப்போல்
சொன்னது செயல் அரிது..!
பாமரனுகாய் பாட்டு படித்தாய்,
வீரனாய் வாழ்ந்து இருந்தாய்,
இறந்தும் முடியாது தொடர்ந்தாய்..!
பார் எங்கும் உன் பா தங்கும்
வானும் மண்ணும் உன்னை பாட கெஞ்சும்
யாழும் குழலும் உன் கவிதை பாடும்..!
(இவைகள் அவர் பாடல்கள் படிக்கும் போது தோன்றிய சிந்தனை துளிகள், தொடர் சந்தங்கள் இல்லை)
உங்கள் பாராட்டு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குகவிதை அருமை நண்பரே.
பாரதி இருந்தால் சந்தோசப்பட்டிருப்பார்.
நன்றி பெரியவரே (அக்பர்)..! just kidding..!
பதிலளிநீக்குஉங்கள் பதிவை தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைத்தால் அனைவரும் படித்து பயன் பெறுவர்.
பதிலளிநீக்குi guess i did that already my friend..!
பதிலளிநீக்குநல்லா வந்துருக்கு பாஸ்
பதிலளிநீக்கு//நீ எழுதி யாம் படித்த
யாவும் கீதை..! //
இந்த வரிகள் நிதர்சனம் ஒவ்வொரு கவிஞனுக்குள்ளும் தோன்றும் வார்த்தைகள் இவை...
thank you Mr.vasanth..
பதிலளிநீக்குரொம்ப நல்லா கவிதை வந்திருக்குங்க. பாரதியை மறக்காமல் அவர் பிறந்த நாளை ஒட்டி வந்திருக்கும் உங்கள் கவிதை அருமைங்க.
பதிலளிநீக்குபாருக்கு ஒரு பாரதி
பதிலளிநீக்குஇருந்தால் போதும்
பாரெல்லாம் பாட்டெழுதும்.
நாட்டுக்கு ஒரு பாரதி
நடந்தால் போதும்
நடப்பதெல்லாம்
நலமே காணும்.
வீட்டுக்கு ஒரு பாரதி
வீற்றிருந்தால் போதும்
வீடே சின்ன நாடாகும்
அதுவே நம் பாரதமாகும்
பாரதியை மறப்பவன் தமிழனாய் இருக்க முடியாது.. பாரதியை தெரியாதவன் படிதவனாகவே இருக்க முடியாது..! கருத்துக்கு மிக்க நன்றி சித்ரா அவர்களே..!
பதிலளிநீக்குgoma அவர்களே.. அசத்துகிறீர்கள் பின்னூட்டமும் கவிதையுடனா.. சிறந்த சிந்தனை..! நன்றி..
பதிலளிநீக்கு//நீ எழுதி நாம் படித்தோம்
பதிலளிநீக்குதமிழில் கீதை,
நீ எழுதி யாம் படித்த
யாவும் கீதை..! //
மிக அருமை
மிக்க நன்றி..!அருள்மொழியன்..!
பதிலளிநீக்குபாரதியைப் பலவிதத்தில் பாடி விட்டீர்கள் சக்தி.
பதிலளிநீக்குகொஞ்சம் தட்டச்சுப் பிழைகளை மட்டும் எடிட் செய்துவிடுங்கள். இன்னும் நிறைய அழகுத் தமிழை உங்களிடம் எதிர்பார்க்க்கிறோம்.
பாடல் வெகு அருமை. மனதிலிருந்து வந்த வார்த்தைகள். மிக்க நன்றி.
நண்பரே!
பதிலளிநீக்குஎதுகை, மோனையுடன் உங்கள் கவிதை அருமை. வாழ்த்துக்கள்.
பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி..!
பதிலளிநீக்குSANTHOSHI
வல்லிசிம்ஹன்
அன்புடன் சக்தி..!
வல்லிசிம்ஹன் அவர்களே..!
பதிலளிநீக்குயாம் அறிந்த வரையில் மாற்றிவிட்டோம்.. இன்னும் ஏதேனும் குற்றம் இருப்பின் குறிப்பிட்டு சொல்லவும்.. வாழ்த்துக்கள், ஊக்கம் தருகிறது, உங்களைபோல் தவறுகளை சுட்டி காட்டுவது பெரும் நல்ல மாற்றத்தை தருகிறது.. தமிழே ஒரு அழகான ஒன்று, அதிலும் அழகிய தமிழா? முயற்சி செய்கிறேன்.. கவிதை எழுத தனியாக அமர்ந்து யோசிப்பதில்லை, கேட்கும் விஷயங்களில் என் மனம் கவந்த அல்லது கோவப்படுத்தும் கருக்களை எடுத்து எழுதுவது அவ்வளவுதான்.. தோன்றுவதை எல்லாம் எழுதுவதில்லை, என் கொள்கைக்கு இயன்றதை மட்டும் எழுதுகின்றேன்.. அன்பன் சக்தி..!
YOU CAN FIND THE POEMS OF BARATHI HERE...
பதிலளிநீக்குhttp://tamilkavingan.blogspot.com/2009/11/blog-post_05.html
http://www.puducherry.com/bharathiar/
http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/
http://tamilelibrary.org/teli/barathiun.html