சனி, ஏப்ரல் 03, 2010

ஆரம்பகால கிறுக்கல்கள்..!



மெய்த்தேடல்

எழுத்தறிவித்தவன்
இறைவன்,
என்னை
அறிவிப்பவன் யார்?
தேடுகின்றேன்...
பொன்னல்ல..
பொருளல்ல..
என்னை நானே..
எனக்குள்ளே..
யாரென்று?
தேடுகின்றேன்..
இன்னும் விடையில்லை..!


(இது அநேகமாக நான் முதன் முதலில் எழுதிய கவிதையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.)










வறட்சி

மழைநீர்த்தேடும்
மண்ணுக்கு
கண் நீர்த்
துளியை
பரிசளிக்கும்
விவசாயி





        



 சாலையோர மனிதன்

நடைபாதைலே
எனதுறக்கம்,
நண்பனாய்
பசிமட்டும்
இருக்கும்,
மனிதகுல
பூதான் நானும்,
இருந்தும்
கல்லறைப்பூகளாய்..!

9 கருத்துகள்:

  1. //வறட்சி :
    மழைநீர்த்தேடும்
    மண்ணுக்குகண்
    நீர்த்துளியை
    பரிசளிக்கும்
    விவசாயி//

    நல்ல கவிதைங்க... முதல் கவிதையும் நல்லாருக்கு... தொடருங்க...

    பதிலளிநீக்கு
  2. அருமை சக்தி.

    ஆளையே காணோம் தொடர்ந்து படையுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. விருது பெற தங்களை அன்புடன் அழைக்கிறேன்

    http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_07.html

    பதிலளிநீக்கு
  4. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    பதிலளிநீக்கு
  5. எழுத்தறிவித்தவன்
    இறைவன்,
    என்னை
    அறிவிப்பவன் இறைவன்,

    என்னை நானே..
    எனக்குள்ளே..
    யாரென்று?
    தேடி ........
    இறைவனது காட்டிய வழியே
    வாழ்வின் வழி
    என்ற வழி வந்தேன் .

    பதிலளிநீக்கு

காண்பன யாவும்
கருத்துக்கு இசைந்ததுவே,
கருதுவதோடு கருத்தையும்
எழுதுங்களேன்..!


இவன் சக்தி..!