புதன், ஏப்ரல் 14, 2010

அன்பே..!


கல்லானும் உனைக் கண்டால்
காதல் கவிப்பல பாடுவான்

கார்ல்மார்க்ஸ் உனை யடைய 
தனி யுடமைப் பேசுவான் 

மகாக்கவி எழுதிய தூரியக்கோல் 
போல் கூரியக்கண்கள் உனது

உன்மலர் முகங்கண்டால் மகா
கவியெழுதும் கைகள் எனது

கண்ணதாசனை உந்தன் தாசனாக்கும் 
கார்மேகக் கூந்தல் உனது 

காணு மியற்க்கை அழகையெல்லாம் 
ரசிப்பதிலே உனக்கு பாவேந்தன்மனது 

அருங் கருத்துப்பல பேசுகின்றாய் 
பட்டுககோட்டையான் போலே 

உன்னை முழுமையாய்க் கவிப்பாட 
வேண்டுமொருவன் கம்பனுக்கு மேலே 


(குறிப்பு - காதல்கவிதை எழுத முதல்முறை முயற்சி செய்துள்ளேன்,)

14 கருத்துகள்:

  1. ரொம்ப நல்லா வந்திருக்கு.

    எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

    ( ஆமா காதல், கவிதை அப்படின்னு புது பாதை தெரியுது. வாழ்த்துகள். :))

    பதிலளிநீக்கு
  2. thank you akbar... my friend asked me to try.. but cant feel the love in this words..

    பதிலளிநீக்கு
  3. அன்பு சக்தி

    தங்கள் பின்னூட்டத்தை இப்போதுதான் பார்த்தேன். பதில் சொல்ல வந்தேன். நீங்களே படத்தை சேர்த்து விட்டதில் மகிழ்ச்சி. மூன்று விருதுகளுமே உங்களுக்குதான் நண்பரே.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் நன்றாக இருக்கிறது தோழரே....வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  5. கம்பனுக்கு மேலே ஒருத்தனா ... பேஷ்.. சக்தி அவ்வளவு அழகியா அவள்

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா25 மே, 2010 அன்று 10:19 AM

    I have added your poem to this Tamil forum's collection of poems.

    It is here - http://www.newtamil.in/forums/showthread.php?31057

    if u dont want it to be there i can remove it.

    பதிலளிநீக்கு
  7. thnk you for visiting

    கமலேஷ்

    thenammailakshmanan

    பதிலளிநீக்கு
  8. hi பெயரில்லா friend, i dont mind, you can add any of my poem..

    பதிலளிநீக்கு
  9. nandri Mr.முனைவர்.இரா.குணசீலன்.. thank you for visiting..

    பதிலளிநீக்கு

காண்பன யாவும்
கருத்துக்கு இசைந்ததுவே,
கருதுவதோடு கருத்தையும்
எழுதுங்களேன்..!


இவன் சக்தி..!