மானிடனாய்ப் பிறந்துவிட்டோம் - நாம்
மதிகெட்டு இருந்துவிட்டோம்
படித்தோம் மறந்துவிட்டோம்
மதசாதியால் பிரிந்துவிட்டோம் - மனம்,
அதை சகதியால் நிரப்பிவிட்டோம்
பணத்தை மனதிலே எத்திவிட்டோம் - குணம்,
அதை குப்பையிலே கொட்டிவிட்டோம்
கொள்ளாத குற்றங்களை செய்திடுவோம் - பலம்
இல்லாத எளியவன்மேல் பழிசொல்லிடுவோம்
தள்ளாத வயது சென்றிடுவோம் - அன்றும்
இல்லாத பெருமை பேசிடுவோம்
மானங்கெட்ட ஈனப்பிறவியடா மானுடன் - இவன்
மாண்டு அழிந்தாலும் மனம் குணம் மாறிடன்
இந்த கவிதையினை யாரும் படிக்கவில்லையா இல்லை படித்தும் பிடிக்கவில்லையா.. பின்னிடுகை ஒன்றும் இன்னும் இல்லையே
பதிலளிநீக்கு