வெள்ளி, நவம்பர் 20, 2009

அழகு..!


பார் அழகு
பார்க்கும் விழியழகு

இருளழகு - அதிலே
ஒரு துளி ஒளியழகு

மலையழகு - ஆங்கே
பொழியும் மழையழகு

சிலையழகு - சிற்பியின்
சீர்மிகு கலையழகு

ஆணழகு - அவன்
கொண்ட ஆண்மை அழகு

பெண்மையழகு - அவள்
ஈனும் தாய்மையழகு

மொழியழகு - செந்தமிழாயின்
நம் சிந்தையழகு

உண்மையழகு - பொதுநல
பொய்யும் அழகு

பிறப்பழகு - பிறர்கெனின்
இறப்பும் அழகு

திருமணமழகு - இருமனம்
ஒன்றானால் இல்லறமழகு

துன்பம் நீக்கும் துறவறமழகு
மானம் காக்கும் மறமழகு

மகுடம் கொண்ட சிரமழகு
வாரி வழங்கும் கரமழகு

மனமழகு - எனின்,
யாவும் பேரழகு..!

24 கருத்துகள்:

  1. மனமழகு - எனின்,
    யாவும் பேரழகு..!
    ///

    அழகானவற்றை பேரழகாக்கும் ரகசியமும் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அழகானவற்றை ரசிக்கும் அழகிய ரசனை உங்களை போல் ஒரு சிலருக்கு மற்றுமே இருக்கசெய்கிறது... அன்புடன் சக்தி..!

    பதிலளிநீக்கு
  3. //திருமணமழகு - இருமனம்
    ஒன்றானால் இல்லறம் அழகு//

    அருமை சக்தி வேல்

    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. இந்த வாழ்த்துக்கு நிகரான வெற்றியோ பரிசோ இருப்பதாக நான் அறியவில்லை...
    என்
    கிறுக்கல்களை கண்டமைக்கும்
    கருதியமைக்கும் எழுதியமைக்கும் - என்மனம்
    உம்மை என் இதயத்தில் வைக்கும்..!

    பதிலளிநீக்கு
  5. அழகு.. அழகு.. அத்தனையும் அழகு.... உண்மையில் உங்கள் மொழி அழகு, சிந்தனை அழகு.. மொத்தத்தில் கவிதை அழகு.. வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. கவிதையும் அழகு.. வாழ்த்துக்கள்.
     
    ஆமா.. பார் அழகுனா?/ எந்த பார்??? :-)

    பதிலளிநீக்கு
  7. மொத்தத்தில் கவிதை அழகு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. இங்கே பார் என்பது உலகம் நண்பரே..!

    என்னையும் என் கவிதையினையும் வாழ்த்தியமைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் ...!

    " உழவன் " " Uzhavan "

    S.A. நவாஸுதீன்

    RaGhaV

    காயத்ரி

    இப்படிக்கு உங்கள் நண்பன் சக்தி...!

    பதிலளிநீக்கு
  9. மிக்க நன்றி Mr.RaGhaV அவர்களே ..

    பதிலளிநீக்கு
  10. மொழி அழகு அது

    உன் வ‌ழியில் மிக‌ அழ‌கு

    வெற்றிபெற வாழ்த்துகள் சகா.

    பதிலளிநீக்கு
  11. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. thank you very much for your support

    அக்பர்

    தியா

    Vidhoosh

    yours sakthi..!

    பதிலளிநீக்கு
  14. தமிழுக்கு அழகு சேர்க்கிறது உங்கள் கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  15. பெண்மையழகு - அவள்
    ஈனும் தாய்மையழகு

    அருமையான கவிதை நல்ல கருத்து வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

காண்பன யாவும்
கருத்துக்கு இசைந்ததுவே,
கருதுவதோடு கருத்தையும்
எழுதுங்களேன்..!


இவன் சக்தி..!