புதன், நவம்பர் 22, 2023

ஒரு ஆன்மாவின் பயணம்

ஒரு ஆன்மாவின் பயணம், 

பிறவி முன் இறையோடு 
உறவாடிய ஒரு பயணம், 

மனித உருபெற கருவறை 
இருளுக்குள் சிறு பயணம், 

சிசு முதல் பிணம் வரை 
தினம் உருமாறி வினை 
சேர்க்கும் கடும் பயணம், 

மாண்டபின் மண்ணுக்குள் 
வினைக்கீடாய் நெடும் பயணம், 

மண்பிளந்து கண்விழித்து 
சேர்த்த வினைக் கெல்லாம் 
விடைகூறும் திகில் பயணம், 

படைப்பு முதல் வீடு வரை 
படிப்படியாய் நிலை மாறும் 
ஆன்மாவின் தொலை தூரப்பயணம், 

வினைக் கீடாய் பெறுவர் 
அவரவர் தம் இருப்பிடம் 
அதுவோர் நிலைமாறாப் பயணம்! 

 

1. படைக்கப்பட்டது முதல் கருவுறும் வரை (50k - 100k yrs)

2. கருவறை வாழ்க்கை (8 - 10 months)

3. இம்மை வாழ்க்கை (1k - 100 - 60 yrs)

4. மண்ணறை வாழ்க்கை (1k - 50k yrs)

5. விசாரணை காலம் (50k yrs)

6. மறுமை வாழ்கை (∞ yrs)

மேற்கண்ட தகவல்கள் இஸ்லாமிய நம்பிக்கை அடிப்படையில் கூறப்பட்டுள்ளது, மேலும் அனைத்து வேதமும் சமயமும் ஒரே இறைவனிடத்தில் இருந்துதான் வந்தது என்றும் அனைத்து வேதமும் இதைத்தான் சொல்கிறது என்றும் இஸ்லாமிய நம்பிக்கை கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காண்பன யாவும்
கருத்துக்கு இசைந்ததுவே,
கருதுவதோடு கருத்தையும்
எழுதுங்களேன்..!


இவன் சக்தி..!