புதன், ஆகஸ்ட் 06, 2014

காஸா...!


அழக்கூட நேரமின்றி 
சிதறிய உடலை 
கழுவி முடித்து 
அடுத்தநொடி அணுகுண்டை 
அன்ணாந்து பார்க்கும் 
அவனுக்காக அழ 
இஸ்லாமியானாய் அல்ல 
நாம் மனிதனாய் 
இருத்தல் போதாதா..? 

இந்தியனாய் தமிழனாய்
இருப்பது பற்று!
இஸ்லாமியானாய் 
இருப்பது வெறி! - இது 
உலக அகராதிகள் 
வரையறுத்த வரையறை! 
இதுயென்ன நீதி.?

சனி, ஆகஸ்ட் 10, 2013

தமிழே



இயலும் இசையும் 
கொண்ட தமிழே 
இனியும் தொடரும் 
உன் நாடகமே 

வருவாய் தருவாய் 
அமுதம் காதினிலே 
படுவாய் படர்வாய் 
மொழியும் நாவினிலே 

இயல்பாய்பேச இனிப்பாய் 
என்றும் செந்தமிழே 
கனியாய் கனிவாய் 
கற்பவர் வாயினிலே 

எழுவாய் பயனிலை 
கொண்ட இலக்கணமே 
எழுவாய் தொடுவாய் 
என்நாவில் இக்கணமே.. 


வெள்ளி, மார்ச் 01, 2013

மங்கையர் தினம்..!


மார்ச் 8 மங்கையர் தினம்..!
ஒற்றைக் கவிதையில் எத்தனை எழுத?
உள்ளங் கொண்ட கவலை.!
எழுதத் தொடங்கிய பேனாவுக்கு 
உள்ளூர தொற்றிக் கொண்ட பயம்
மை தீர்ந்துவிடுமே என்று.!

பெண்மையின் மென்மை 
பேசிய பேனாக்களெல்லாம் 
பெண்ணின் பெருமை 
அவள் கொண்டதிறமை 
இவையென பட்டியலிட்டு 
பறைசாற்றும் காலமிது.! 

அன்னை ஆயிஷா, தெரசா, 
இந்திராகாந்தி  யெல்லாம் பானைச் 
சோற்றின் ஒருபதம் - பானையளவு 
எவர் கணிப்பதும் உண்மையில் 
அளவில் அற்பமே ! 

துறைக்கொரு பெண்ணிருந்த 
காலம்போய் தூவிய மழையென 
துறைதோறும் அசத்தும் 
மங்கையர் ஆயிரமாயிரம் - இங்கே 
அரிசியல்போய் அரசியலும் 
செய்யும் பெண்ணினம்.! 

காதலுக்கு கணிக்கையில்லை நீ 
அடிப்படையை புரட்டிபோட 
புயலாய் வந்த புரட்சி, 
ஆணின் வெற்றிக்கு தேவை நீ 
ஓயாதுழைப்பதுன் பிறவிகுணம் 
உந்துதலின்றி பெறுவாய் வெற்றி