எதிமறை வார்த்தைக்கெல்லாம்
வரையறா விடுமுறைதந்து
உள்ளஞ்சிலிர்க்கும் உணர்வூட்டும்
தமிழ்த்தேடும் அனுபவம்
வெற்றிதரா தருணங்கள்
சோகம்விதைக்கா ஆச்சரியம்
இலக்கிடம் இடைவெளியின்றி
நகரும் நோகாபாதம்
உழைப்பின் ருசியறிந்த
உச்சக்கட்ட நிமிடங்கள்
வேர்வையின்றி விளைந்த
வெற்றியும் கசந்தமாயம்
என்னை யாரென்று உணர்ந்தபின்
எத்தனை எத்தனை மாற்றம்
"நாளை" விழிகளில் பதிகிறது
இமயம் தொட்ட நிமிடங்களாய்...


